search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்கள் மரியாதை"

    • சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    சட்டமேதை என்று அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கிண்டி கவர்னர் மாளிகையில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அங்குள்ள தர்பார் அரங்கில் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் அம்பேத்கரின் புகழ் மற்றும் அவரது சிறப்புமிக்க செயல்பாடுகளை விளக்கி பேசி பெருமைகளை நினைவு கூர்ந்தார்.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு அம்பேத்கரை வாழ்த்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.

    இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது.

    தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தி.நகரில் உள்ள கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எல்.ஐ.சி. வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திராவிடர் கழகம் சார்பில் பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதே போன்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • பா.ஜனதா கட்சி சார்பில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சதீஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115-வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பாலு எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், எம்.எல்.ஏ.க்கள் மயிலை வேலு, தாயகம் கவி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கே.கே.நகர் தனசேகரன், செய்தி துறை இயக்குனர் ஜெயசீலன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்தும், படத்துக்கு மலர் தூவியும், மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன், டி.ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பொள்ளாச்சி ஜெயராமன், மாதவரம் மூர்த்தி, பாண்டிய ராஜன், சரோஜா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சத்யா, வேளச்சேரி அசோக், விருகை ரவி, ராஜேஷ், கந்தன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அெலக்சாண்டர்.

    எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சுனில், முகப்பேர் இளஞ்செழியன்.

    கழக மாணவர் அணி துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, திருமங்கலம் கே.மோகன், கே.பி.முகுந்தன், கொளத்தூர் கணேசன், சைதை சொ.கடும்பாடி, வேளச்சேரி மூர்த்தி, ஏ.எம். காமராஜ், வக்கீல் சதாசிவம், எம்.ஜி.அர்.நகர் வெற்றிவேல் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் தாமோதரன், மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பட்டுக்கோட்டை என்.ராஜேந்திரன், மாணவர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் யஷ்வந்த் சாகர் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

    பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பா.ஜனதா கட்சி சார்பில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சதீஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் கவிஞர் வைரமுத்து, நடிகர் எஸ்.வி.சேகர், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பல்வேறு தேவர் சமூதாய அமைப்புகள் சார்பிலும் ஏராளமானோர் திரண்டு வந்து நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தேவர் சிலைக்கு ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தனர்.

    மேற்கு மாம்பலத்தில் தென் சென்னை பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் நாச்சிக்குளம் சரவணன் ஏற்பாட்டில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், தஞ்சை ராமநாதன், டாக்டர் வெங்கடேசன், நாகேஷ் ராஜன், தி.நகர் விக்னேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×